கிரேன் ஆப்பரேட்டர்களாக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு
தூத்துக்குடி:தூத்துக்குடி வ.உ.சி., சிதம்பரனார் துறைமுகம் மூன்றாவது சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தில் கிரேன் ஆப்பரேட்டர்கள், பாதுகாவலர், மனித வளம், ஐ.டி., நிதி என அனைத்து துறைகளிலும் பெண்களே பணிபுரிகின்றனர்.சரக்கு கப்பல்களில் இருந்து பெரிய அளவிலான கன்டெய்னர்களை ஏற்றி, இறக்கும் கடினமான பணியிலும் இளம்பெண்கள் பணிபுரிகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த எலிசபெத், ராஜகுமாரி, மூத்த அதிகாரி ஆஷா என 40 சதவீதம் பெண்களே பணிபுரிகின்றனர். இவர்களின் பணியை பிரதமர் மோடி பாராட்டியதாக சரக்கு பெட்டக துணைத் தலைவர் ஆஷா தெரிவித்தார்.