பைக் நிறுத்தியதில் தகராறு தொழிலாளி அடித்து கொலை
கோவில்பட்டி:சாலையோரத்தில் பைக் நிறுத்தப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கட்டட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியை சேர்ந்தவர் சமுத்திரவேல், 41. கட்டட தொழிலாளி. அப்பகுதியில் புதிதாக கட்டிய வீட்டை, நேற்று முன்தினம் இரவு பார்க்க சென்ற அவர், தான் ஓட்டி வந்த பைக்கை சாலையோரம் நிறுத்தியிருந்தார்.இதுதொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ், 32, என்பருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். ஜெயராஜ், கீழே கிடந்த கல்லால், சமுத்திரவேலை தாக்கி தப்பியோடி விட்டார். சிறிது நேரத்தில் சமுத்திரவேல் உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின் புத்துார் போலீசார், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் ஜெயராஜை கைது செய்தனர்.