மேலும் செய்திகள்
கரும்பு ஜூஸ் மிஷின் மீது பைக் மோதி வாலிபர் பலி
03-Nov-2024
துாத்துக்குடி:துாத்துக்குடி, பொட்டல்காடு வடக்கு தெருவை சேர்ந்த ஜெயம், 49, ஒப்பந்த அடிப்படையில், துாத்துக்குடி துறைமுகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் துறைமுக மூன்றாவது தளத்தில் அவர் பணியில் இருந்தார்.அப்போது, பி.எஸ்.டி.எஸ்., நிறுவனத்திற்கு சொந்தமான கிரேன் எதிர்பாராதவிதமாக ஜெயம் மீது மோதியதில் இடுப்பு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக துறைமுக மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.ஜெயம் இறந்துவிட்டதாக பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார். புதியம்புத்துார் பகுதியை சேர்ந்த கிரேன் ஆப்பரேட்டர் வாஞ்சிநாதன், 37, என்பவரை தெர்மல்நகர் போலீசார் கைது செய்தனர்.
03-Nov-2024