உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / நிலத்தகராறில் பெப்பர் ஸ்பிரே அடித்ததில் 10 பேர் காயம்

நிலத்தகராறில் பெப்பர் ஸ்பிரே அடித்ததில் 10 பேர் காயம்

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே நிலத்தில் முள்வேலி அமைத்ததில் ஏற்பட்ட தகராறில், 'பெப்பர் ஸ்பிரே' அடித்ததில், 10 பேர் காயமடைந்தனர். திருப்பத்துார் மாவட்டம், பச்சூர் அடுத்த மயிலாரம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சிவானந்தம், 50. இவரது நிலத்திற்கு பக்கத்து நிலத்தை சேர்ந்தவர், நில அளவீடு சரியாக செய்யாமல், திடீரென முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்கு சிவானந்தம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த சிவானந்தம் குடும்பத்தினர், முள்வேலி அமைக்கும் பணியாளர்கள் மீது, 'பெப்பர் ஸ்பிரே' எனும் திருடர் மற்றும் வன விலங்குகளிடம் இருந்து காக்கும் மிளகாய் பொடி அடைத்த கருவியை அடித்தனர். இதில், காயமடைந்த தொழிலாளர்கள், 10 பேர், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !