வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
திருப்பத்துார்:* திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி, 17; பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானார். ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர்.* ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியை சேர்ந்த விவசாயி குப்பன், 45; இவரது உறவினர் மகன் கண்ணன், 13, என்பவரை வளர்த்து வந்தார். ஆயர்பாடி அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன். அமராபுரம் கிராமத்திற்கு பசுமாடுகளை மேய்க்க நேற்று முன்தினம் சென்றார். வீடு திரும்பாத நிலையில், குப்பன் புகாரின்படி அவளூர் போலீசார் தேடினர். அமராபுரம் கிராம குளத்தில் சிறுவனின் சடலம் மிதந்தது.* வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனுாரை சேர்ந்த மூர்த்தி மகன் பிரதீப், 16; பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். நேற்று முன்தினம் மாலை கோவில்மேடு பகுதி ஏரியில் குளித்தபோது, நீரில் மூழ்கி பலியானார்.