உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / திருட்டு வழக்கில் கைதான தி.மு.க., பஞ்., தலைவி கட்சியிலிருந்து டிஸ்மிஸ்

திருட்டு வழக்கில் கைதான தி.மு.க., பஞ்., தலைவி கட்சியிலிருந்து டிஸ்மிஸ்

ஆம்பூர்:ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பஞ்., தலைவி திருட்டு வழக்கில் கைதானதால் அவரது 'செக் பவர்' பறிக்கப்பட்ட நிலையில் தி.மு.க., அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம் மாதனுார் யூனியனுக்கு உட்பட்ட தி.மு.க., பிரமுகர் நரியம்பட்டு பஞ்., தலைவி பாரதி 54. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பஸ்சில் சென்ற பெண் பயணி ஒருவரிடம் நகை திருடிய வழக்கில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது பஞ்., தலைவருக்கான 'செக் பவர்' மற்றும் கட்டட அனுமதி உட்பட இதர ஊராட்சி ஒப்புதல் ஆகிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இது குறித்து தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலுார் மாவட்டம் குடியாத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நரியம்பட்டு பஞ்., தலைவி பாரதி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை