உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / டிரைவருக்கு திடீர் வலிப்பு 46 மாணவர்கள் தப்பினர்

டிரைவருக்கு திடீர் வலிப்பு 46 மாணவர்கள் தப்பினர்

வாணியம்பாடி:வாணியம்பாடியில், தனியார் பள்ளி வேன் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதில், வேன் தேசிய நெடுஞ்சாலை டிவைடரில் ஏறியதில் அதிர்ஷ்டவசமாக, 46 மாணவ - மாணவியர் தப்பினர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனுார் வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பள்ளி முடிந்து, 46 மாணவ - மாணவியரை, வாணியம்பாடியில் விட, பள்ளி வேனை டிரைவர் ஜாவித், 35, ஓட்டிச் சென்றார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், புதுார் பகுதியில் சென்றபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதில், வேன் தாறுமாறாக ஓடி, சாலை நடுவே ரோடு டிவைடர் மீது ஏறியது. அப்போது வேனில் இருந்த கிளீனர் சுதாரித்து, பிரேக் போட்டு வேனை நிறுத்தினார். போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில், பெரியளவில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. நேரில் பார்த்த பொதுமக்கள், வேனிலிருந்த பள்ளி மாணவ - மாணவியரை பத்திரமாக மீட்டனர். ஜாவித்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ