உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஜி.ஹெச்.,சில் அலப்பறை குடிமகனுக்கு காப்பு

ஜி.ஹெச்.,சில் அலப்பறை குடிமகனுக்கு காப்பு

ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பத்தை சேர்ந்தவர் செல்வராணி, 48. நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றிரவு அவரை பார்க்க அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜரத்தினம், 34, என்பவர், மது போதையில் வந்தார். மருத்துவர், செவிலியர்களிடம், சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பணியில் இருந்த நாட்றம்பள்ளி பெண் காவலர் சசிகலா அவரை எச்சரித்து, வெளியே செல்ல கூறினார். இதில் ஆத்திரமடைந்தவர், சசிகலாவை தாக்கினார். உதவி மருத்துவர் விக்னேஷின் புகார்படி, நாட்றம்பள்ளி போலீசார், ராஜரத்தினத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை