அரசு பள்ளி ஊழியர் ரயிலில் சிக்கி பலி
வாணியம்பாடி:அரசு பள்ளி ஊழியர் ரயிலில் சிக்கி பரிதாபமாக பலியானார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி பாறைகொல்லி வட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன், 54. இவர், திம்மாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று, கொடையாஞ்சி அருகே தன் நண்பர்களுடன் சென்றபோது, அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, பெங்களூருவிலிருந்து - சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.