உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / கல்லால் அடித்து காவலாளி கொலை: ஒருவருக்கு காப்பு

கல்லால் அடித்து காவலாளி கொலை: ஒருவருக்கு காப்பு

திருப்பத்துார்: திருப்பத்துாரில், சூப்பர் மார்க்கெட் காவலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். திருப்பத்துாரில், கோல்டன் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு திருப்பத்துார் லட்சுமி நகரை சேர்ந்த அந்தோணி, 65, என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 67, என்பவரும், காவலாளியாக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, அந்தோணி பணியில் இருந்த நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது பணியை மாற்ற, கார்த்திகேயன் சென்றார். அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கார்த்திகேயன், கல்லால் சரமாரியாக தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த அந்தோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பத்துார் டவுன் போலீசார், கார்த்திகேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ