உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / அரசு திட்டங்களை விமர்சித்த தலைமையாசிரியை இடமாற்றம்

அரசு திட்டங்களை விமர்சித்த தலைமையாசிரியை இடமாற்றம்

வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா. இவர், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவரிடம், பேசிய ஆடியோ, கடந்த, 2 நாட்களுக்கு முன் வெளியானது.அதில், 'கல்லுாரி கனவு திட்டம், அந்த திட்டம், இந்த திட்டம் என, கோடை விடுமுறையில், அரசின் கீழ் செயல்படும் கல்வித்துறை அதிகாரிகள் உயிரை எடுக்கின்றனர். அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு என கூறிக்கொண்டு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து, கேள்வி கேட்பது அருவருப்பாக உள்ளது' என பேசி இருந்தார்.இதையடுத்து அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அரசு பள்ளிக்கு, நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை