உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / அரூர் - சேலம் சாலையில் புதிய சுங்கச்சாவடி திறப்பு

அரூர் - சேலம் சாலையில் புதிய சுங்கச்சாவடி திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அருகே, அரூர்- - சேலம் தேசிய நெடுஞ்சாலை, எச்.புதுப்பட்டியில் புதிய சுங்கச்சாவடி நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல் சேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முதல், தர்மபுரி மாவட்டம், அ.பள்ளிப்பட்டி வரை, 320 கோடி ரூபாய் மதிப்பில், 86 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலை போடப்பட்டது. இதில், ஊத்தங்கரை பஸ் டிப்போ முதல், ஏ.பள்ளிப்பட்டி வரையிலான, 44 கி.மீ., தொலைவுக்கு எச்.புதுப்பட்டியில், புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இது நேற்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை