சாலையில் கொட்டிய அமிலம் மூச்சு திணறலால் மக்கள் அவதி
ஆம்பூர்:தொழிற்சாலைக்கு டேங்கர் லாரியில் கொண்டு சென்ற ரசாயன அமிலம், சாலையில் கொட்டியதால், பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பஞ்., பாங்கிஷாப் பகுதியில், தொழிற்சாலைக்கு டேங்கர் லாரியில் அமிலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, டேங்கரில் ஓட்டை ஏற்பட்டு, சாலையில் அமிலம் கொட்டியது. இதில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் கடும் அவதிக்கு ஆளாகினர். ஆம்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் கொட்டிய அமிலத்தின் மீது, தண்ணீரை பீய்ச்சியடித்து அமிலத்தின் காரத்தன்மையை நீர்க்க செய்தனர்.