உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / 80 பேரின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி ரூ.1 கோடி மோசடி; போலீசில் புகார்

80 பேரின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி ரூ.1 கோடி மோசடி; போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாணியம்பாடி; வாணியம்பாடி அருகே, 80 பெண்களின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி, ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, தலைமறைவான மகளிர் சுய உதவிக்குழு தலைவியை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் சுபா, 40, இவர், அதே பகுதியை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட பெண்களிடம், 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து, நடத்தி வருகிறார். அதற்காக, 80க்கும் மேற்பட்ட பெண்களின், ஆதார், பான் கார்டை சுதா பெற்று கொண்டார். அந்த கார்டுகளை பயன்படுத்தி, அவர்களுக்கே தெரியாமல், பல்வேறு தனியார் வங்கியில் மேலாளர் மற்றும் ஊழியர்கள் உதவியுடன், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று தலைமறைவானார். கடன் கொடுத்த வங்கி ஊழியர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, அளித்த பெண்களிடம், கடன் தொகையை திருப்பி செலுத்த சொல்லி தொந்தரவு செய்தனர். இதையடுத்து, வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில், 40க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று புகார் அளித்தனர். அதில், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்த சுபா என்பவர், தங்களது ஆதார், மற்றும் பான்கார்டுகளை தவறாக பயன்படுத்தி தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூறி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Raj
ஏப் 03, 2025 10:18

எப்பொழுது டிஜிட்டல் மயமாக்கி ஆதார் கார்டையும், பான் கார்டையும் லிங்க் கொடுக்க சொன்னார்களோ அப்பவே கோவிந்தா தான் நம் பணத்திற்கு. ஆதார் கார்டும், பான் கார்டும் உண்டாக்கியவனுக்கு தெரியாது எப்படி பணத்தை கொள்ளை அடிப்பது என்று.


Sudha
ஏப் 03, 2025 10:17

விட்டுப்போன விஷயம்- அந்த 80 பேரின் மொபைல் போன்களையும் சுதா வாங்கி வைத்துள்ளார் அந்த 80 பேரின் கையெழுத்துகளையும் அவரே போட்டுள்ளார். இல்லையேல் இது எப்படி சாத்தியம்?


KRISHNAN R
ஏப் 03, 2025 07:53

வங்கி அதிகாரிகள். டீ ஆத்தி..செய்தார்கள்? இனி. கடன் வழங்கும் கம்பெனிகள் நேரில் கண்டு சம்மதம் என்று சொன்னால் மட்டும் கடன் தர வேண்டும்


Padmasridharan
ஏப் 03, 2025 07:08

பெண் அதிகாரத்தின் இன்னொரு முகம் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை