உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / கோழி திருடியதை கூறியதால் மூதாட்டியை கொன்ற சிறுவன்

கோழி திருடியதை கூறியதால் மூதாட்டியை கொன்ற சிறுவன்

ஆலங்காயம் : திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம், ராஜாபாளையத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஸ்வநாதராவ் மனைவி சந்திராபாய், 75, கணவரை இழந்து தனியாக வசித்து வந்த நிலையில், 2ம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆலங்காயம் போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவனை சந்தேகத்தின்படி, பிடித்து விசாரித்தனர். அப்பகுதி வீடுகளில் கோழி, பல்வேறு பொருட்களை சிறுவன் திருடி வந்துள்ளார். இதை சந்திராபாய் பார்த்ததால், 'வெளியில் சொல்லி விடாதீர்கள்' என, சிறுவன் கூறியுள்ளான்.அதை பொருட்படுத்தாமல் வெளியே கூறியதால், ஆத்திரமடைந்த சிறுவன் சந்திராபாய் வீட்டுக்கு சென்று, துாங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி, தலையில் இரும்பு ராடால் தாக்கி கொன்றுள்ளார். ஆலங்காயம் போலீசார் சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை