மானை சாப்பிட்ட தந்தை, மகனுக்கு காப்பு
திருப்பத்துார்:திருப்பத்துார் அடுத்த ஆண்டியப்பனுார் காப்புக்காட்டில், சேர்க்கானுாரை சேர்ந்த ராமமூர்த்தி, 46, அவரது மகன் முருகன், 23, உள்ளிட்ட சிலர், வேட்டையாடிய மானை நேற்று முன்தினம் இரவு சமைத்து கொண்டிருந்தனர்.தகவலின்படி, திருப்பத்துார் வனச்சரகர் சோழராஜன் மற்றும் வனத்துறையினர், நேற்று சம்பவ இடம் சென்று சோதனை செய்ததில், அங்கு, ஏழு பேர் கொண்ட கும்பல், வேட்டையாடிய மானை சமைத்து கொண்டிருந்தது தெரிந்தது.வனத்துறையினர் வருவதை அறிந்ததும், ஐந்து பேர் தப்பினர். ராமமூர்த்தி, அவரது மகன் முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய ஐவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.