மேலும் செய்திகள்
சேலத்தில்குடிநீர் கேட்டுமறியல் போராட்டம்
08-Apr-2025
திருப்பத்துார்:தனியார் கல் குவாரிக்கு சென்ற லாரி மோதியதில் மூதாட்டி பலியானார். கல்குவாரியை மூட வலியுறுத்தி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பஞ்., உட்பட்ட காட்டுக் கொல்லை பகுதியில், தனியார் கல் குவாரி உள்ளது. நேற்று அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி பாப்பு, 63, சாலையோரம் நடந்து சென்றார்.அவ்வழியாக குவாரிக்கு சென்ற லாரி, அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். ஆத்திரமடைந்த கிராம மக்கள், குவாரியை மூட வலியுறுத்தி, ஆம்பூர் - வெள்ளக்குட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை, ஆம்பூர் தாலுகா போலீசார் சமாதானப்படுத்தி, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, மறியலை கைவிட செய்தனர். தப்பியோடிய டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
08-Apr-2025