மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய தொழிலாளி சாவு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, இரும்பு தொரட்டியால் மரத்தில் முருங்-கைக்காய் பறித்தபோது, உயர் மின்னழுத்த கம்பியில், தொரட்டி உரசியதில், உடல் கருகியவர் உயிரிழந்தார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்-பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்து, 40. இவர் கடந்த, 6ம் தேதி தன் வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தில் இரும்பு தொரட்டியால் முருங்கைக்காய் பறித்தபோது, மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் தொரட்டி உரசியதில், இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடல் முழுவதும் கருகிய நிலையில், 70 சதவீத தீக்காயத்துடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். வாணியம்-பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.