உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

ஆம்பூர், ஆம்பூர் அருகே, தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலியானார். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் அஜய், 20. தனியார் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று தன் நண்பர்கள், 5 பேருடன், கம்பி கொல்லை பகுதியில் உள்ள ஆனைமடகு தடுப்பணையில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார். உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. ஆம்பூர் தீயணைப்பு துறை வீரர்கள், 2 மணி நேரம் போராடி, விஜய்யை சடலமாக மீட்டனர். ஆம்பூர் டவுன் போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ