உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திட்டப்பணியில் வேகம் காட்டுங்க! கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

திட்டப்பணியில் வேகம் காட்டுங்க! கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.மாவட்ட கண்காணிப்பு அலுவலரான நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.ஆய்வுக்குப்பின், 'சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள், அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் பணிபுரியவேண்டும். தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்' என, கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ