உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோ கோ வில் வெற்றியே வா ... வா ... போட்டா; போட்டியில் களமிறங்கிய மாணவர் படை

கோ கோ வில் வெற்றியே வா ... வா ... போட்டா; போட்டியில் களமிறங்கிய மாணவர் படை

திருப்பூர்: திருப்பூர் - அவிநாசி ரோடு, ஏ.கே.ஆர்., மெட்ரிக் பள்ளியில் முதல்வர் கோப்பை பள்ளி மாணவ, மாணவியர் கோ கோ போட்டி நடந்தது.இதில், மாணவியர் அரையிறுதி போட்டிக்கு, காங்கயம் கார்மல் கார்டன் பள்ளி, விசாலாட்சி பெண்கள் பள்ளி, சிவநிகேதன் பள்ளி, பிரன்ட்லைன் பள்ளி அணிகள் தகுதி பெற்றன. பதிவு செய்து பங்கேற்ற பள்ளி அணிகள் எண்ணிக்கை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, அரையிறுதி, இறுதி போட்டிகள் வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வாலிபால்

திருப்பூர், பூலுவப்பட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நேற்று நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து பதிவு செய்த பள்ளி அணிகள் பங்கேற்றன.'நாக் - அவுட்' முறையில் நடந்த போட்டியில், பத்துக்கும் மேற்பட்ட அணிகள் வெளியேற, திறமை காட்டிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டிக்கு ஏ.வி.பி., பள்ளி - பிரன்ட்லைன் பள்ளி அணியும், இரண்டாவது அரையிறுதிக்கு, ஆக்ஸ்போர்டு - வித்யவிகாசினி பள்ளி அணியும் முன்னேறி இருந்தது.நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர் கூடைப்பந்து போட்டியும், எஸ்.டி.ஏ., உள்விளையாட்டு அரங்கில் மாணவியர் கூடைப்பந்து போட்டியும் நடந்தது.மாணவியர் முதல் அரையிறுதி போட்டிக்கு உடுமலை ஆர்.வி.ஜி., - திருப்பூர் சென்சுரி பவுண்டேசன் பள்ளி அணிகளும், மற்றொரு அரையிறுதிக்கு, பெம் பள்ளி - சிவநிகேதன் பள்ளி அணிகள் முன்னேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ