உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 11 பேர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு 

11 பேர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு 

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 48 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இவர்களில், 11 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன் விவரம் வருமாறு:திருப்பூர் மாவட்ட தொடக்கப்பள்ளி அளவில், பாரப்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அருணா. உடுமலை, முள்ளுப்பட்டி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் தர்மராஜ், மூலனுார், கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் பாரதி.அய்யங்காளிபாளையம், வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி சிறப்பாசிரியர் (ஓவியம்) கனகராஜ், குடிமங்கலம், பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சிவராஜ், தாராபுரம், காந்திஜிநகர் காலனி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் ைஷலஜா.உயர்நிலை, மேல்நிலை பள்ளி அளவில், தாராபுரம், ஆச்சியூர், அரசு உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் பால்ராஜ், மங்கலம், அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வக்குமார், பல்லடம், சேகாம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சுமதி, உடுமலை, எலையமுத்துார், ஸ்ரீ.ந.வெ., அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செல்வராஜ் மற்றும் உடுமலை, ஸ்ரீ கன்னிமா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூரணி ஆகிய, 11 பேர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, இன்று காலை பள்ளிகல்வித்துறை சார்பில், சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை