உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்கூட்டர் கேட்டு 125 விண்ணப்பம்

ஸ்கூட்டர் கேட்டு 125 விண்ணப்பம்

திருப்பூர் : மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இரண்டாவது நாளாக நேற்று, உதவி உபகரணங்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள், 65 பேர் பங்கேற்றனர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த்ராம்குமார் தலைமையிலான குழுவினர், பயனாளிகளை தேர்வு செய்தனர். நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகள் 125 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ