உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தைகளில் ரூ.8.70 கோடிக்கு விற்பனை 

உழவர் சந்தைகளில் ரூ.8.70 கோடிக்கு விற்பனை 

திருப்பூர்;திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 8.70 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தையில், ஜூன் மாதத்தில், 775.200 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. இரண்டு கோடியே, 98 லட்சத்துக்கு, 6,345 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. விளை பொருட்களை, 2,913 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.வாடிக்கையாளர்களாக, 96 ஆயிரத்து, 825 பேர் வருகை புரிந்துள்ளனர்.ஆகஸ்ட் மாதத்தில், பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தையில், 1,965 டன் காய்கறி வரத்தாக இருந்தது. காய்கறி, பழங்கள், கீரை வகை என பல்வேறு விதமான விளை பொருட்களுடன், 7,782 விவசாயிகளும், 1.15 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வருகை புரிந்தனர். முப்பது நாட்களில், ஐந்து கோடியே, 72 லட்சத்து, 45 ஆயிரத்து, 020 ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. ஆக., மாதம் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து, 8.70 கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'ஆடி மாதம், ஆடி பெருக்கு, ஆடிஅமாவாசை, ஆடி வெள்ளி விசேஷங்களால் காய்கறிகளை வாங்க சந்தையை தேடி வந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை பத்து சதவீதம் உயர்ந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !