உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது

கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது

திருப்பூர்:திருப்பூரில், ரோட்டோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில், இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 24. நேற்று முன்தினம் நள்ளிரவு வஞ்சிபாளையம் - திருப்பூர் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் குறுக்கே நாய் வர, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. லாரியின் டீசல் டேங்க் உள்ள பகுதியில் மோதிய வேகத்தில், இரு வாகனமும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காரில் வந்த சக்திவேல் விரைந்து கீழே இறங்கியதால் உயிர் பிழைத்தார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கார் முழுவதும் தீயில் நாசமானது. கன்டெய்னர் லாரியின் ஒரு பகுதியும் எரிந்தது. திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'பழுது காரணமாக கன்டெய்னர் லாரி ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்தது. வாகனம் நிறுத்தப்பட்ட இடத்துக்கு, நுாறு மீட்டர் முன்னதாக வளைவு உள்ளது. வளைவில் திரும்பியவுடன் நாயும் குறுக்கே வர, ரோட்டோரம் நின்றிருந்த லாரி தெரியாமல், அதன் டீசல் டேங்க் மீது மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ