உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாயை கொஞ்சம் பாருங்க நீர்வளத்துறைக்கு கோரிக்கை

கால்வாயை கொஞ்சம் பாருங்க நீர்வளத்துறைக்கு கோரிக்கை

உடுமலை;மண் வாய்க்கால்கள் துார்வாரும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கிளை கால்வாய்களில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளை கால்வாயில், 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மண் கால்வாய்கள் துார்வாரப்பட்டு வருகிறது.ஆனால், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, புதுப்பாளையம் கிளை கால்வாயில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.வழக்கமாக பாசனத்துக்கு முன், கரையிலுள்ள முட்செடிகள் மட்டுமாவது பொதுப்பணித்துறையினரால் அகற்றப்படும். தற்போதைய சீசனில், அதிகாரிகள் யாரும் எட்டி பார்க்காததால், கிளை கால்வாய் பரிதாப நிலையிலேயே உள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை