உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்வுக்கு படி சிறப்பு நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்வுக்கு படி சிறப்பு நிகழ்ச்சி

உடுமலை : உடுமலையில், 'நான் முதல்வன் உயர்வுக்கு படி' நிகழ்ச்சி, செப்., 18ம் தேதி நடக்கிறது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள், உயர்கல்வி வாய்ப்பு பெறுவதற்கான, 'நான் முதல்வன்' சிறப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.இதன் ஒருபகுதியாக, 'உயர்வுக்கு படி' என்ற சிறப்பு நிகழ்ச்சி, உடுமலையில் செப்., 18ம் தேதி எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.இதில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த, 2022 - 23, 2023 - 24ம் கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பு முடித்து இதுவரை உயர்கல்வியில் சேராமல் இருப்பவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ்1 வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்களும், இந்த முகாமில் பங்கேற்கலாம்.ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில், காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு, கல்விக்கடன் பெறுவதற்கும் மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் பாதுகாப்பாக முகாம் நடக்கும் இடத்துக்கு மாணவர்களை அழைத்து வருவதற்கு, பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ