உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபாய வளைவில் வேகத்தடை தேவை

அபாய வளைவில் வேகத்தடை தேவை

உடுமலை;அபாய வளைவு பகுதியில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, பெதப்பம்பட்டி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், பெதப்பம்பட்டி அமைந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நுாற்பாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளதால், அங்குள்ள நால்ரோடு சந்திப்பு உள்ளிட்ட ரோடுகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.இந்நிலையில், நால்ரோடு சந்திப்பில் இருந்து செஞ்சேரிமலை ரோட்டில், வாரச்சந்தை வரையிலான பகுதியில், சமீபமாக தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக, இறைச்சிக்கடைகள் அமைந்துள்ள வளைவு பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில், வேகத்தடை அமைத்து, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையை வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை