மேலும் செய்திகள்
பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து,,
27-Aug-2024
அனுப்பர்பாளையம்: திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் செந்தில்குமார், 55, நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், பூட்டப்பட்டு இருந்தது.இரவு 11:00 மணி அளவில் நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிவதை அறிந்த காவலாளி உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.பனியன் துணி அதிகளவில் வைக்கப்பட்டு இருந்ததால், தீ வேகமாக பரவத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வண்டியின் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மூன்று மணி நேரத்திற்கும் மேலாக 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பனியன், உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள், இயந்திரம், கட்டடம் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2024