உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்து அபாயம்: வேகத்தடுப்பு அவசியம்

விபத்து அபாயம்: வேகத்தடுப்பு அவசியம்

பல்லடம்; 'பல்லடம் -- தாராபுரம் நெடுஞ்சாலையில், விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதால், வேகத்தடுப்புகள் வைக்க வேண்டும்,' என, கள்ளக்கிணறு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் -- தாராபுரம் ரோடு, மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குண்டடம், தாராபுரம் வழியாக, பழனி, மதுரையை இணைக்கும் இந்த வழித்தடத்தில், அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதால், சமீபத்தில், இந்த ரோடு, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பின், வாகனங்கள் இந்த ரோட்டில் அசுர வேகத்தில் வந்து செல்கின்றன. இதனால், கள்ளக்கிணறு பகுதியில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:கள்ளக்கிணறு பகுதியில், தாராபுரம் ரோட்டில் இருந்து, சித்தம்பலம், மாதப்பூர், தொட்டம்பட்டி செல்லும் சாலைகள் பிரிகின்றன. இக்கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் ரோட்டை கடந்து செல்கின்றனர்.இப்பகுதியில் ரோடு வளைவாக உள்ளதால், தாராபுரம் - பல்லடம் நோக்கி வரும் வாகனங்களுக்கு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ரோட்டை கடப்பது தெரிவதில்லை.நெடுஞ்சாலையில், வாகனங்கள் அசுர வேகத்தில் வருவதால், ரோட்டை கடக்க முயற்சிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. தாராபுரம் - -பல்லடம் நோக்கி வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்க, இப்பகுதியில், வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும்.போலீசார், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக வேகத்தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி