மேலும் செய்திகள்
ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
27-Feb-2025
திருப்பூர், : திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் நடந்தது. பேரவை செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிவசக்தி வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஷோபனா, சிறுபான்மையினர் நல பிரிவு துணை செயலாளர் ஜான் மகேஷ் பிரான்ஸ்வா ஆகியோர் பேசினர். வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
27-Feb-2025