எம்.பி.,யிடம் முறையீடு
திருப்பூர்; திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், எம்.பி., சுப்பராயனை நேற்று சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினர்.அதில், 'இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும். மருத்துவர்கள், பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும்.மருத்துவமனைக்கு வரும் ரோட்டை சீரமைக்க வேண்டும். மருத்துவமனை கட்டடத்துக்கு போடப்பட்டுள்ள அபரிமிதமான வரியை, குறைக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாகஎம்.பி., உறுதி அளித்தார்.