உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிற்சங்க நிர்வாகிக்கு 16ம் தேதி பாராட்டு விழா

தொழிற்சங்க நிர்வாகிக்கு 16ம் தேதி பாராட்டு விழா

அனுப்பர்பாளையம்; திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளருமான திருப்பூர் துரைசாமியின், 65 ஆண்டு கால தொழிற்சங்க பணியை பாராட்டி, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், பாராட்டு விழா வரும், 16ம் தேதி காலை 10:00 மணிக்கு கோவை ஹோப் காலேஜ் அருகில் மணி மஹாலில் நடைபெறுகிறது.திருப்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாலை தொழிலாளர்களின் வேலை முறை, அதற்கான ஊதியம் நிர்ணயம், ஊதிய உயர்வு, போனஸ், போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக மாநில முழுவதும் பயணம் மேற்கொண்டு பல்வேறு தொழிற்சங்க தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.பாராட்டு விழாவில், கிருஷ்ணராஜ் வானவராயர், மூத்த வழக்கறிஞர் நாகசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற தொழிலாளர் கூடுதல் ஆணையர் மாரிமுத்து மற்றும் அனைத்து தொழிற்சங் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை