50 குடும்பத்தினருக்கு உதவி; பாரதி அறக்கட்டளை வழங்கல்
பல்லடம்; ரமலான் பண்டிகையை முன்னிட்டு, பல்லடத்தில், ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இதனையொட்டி, பல்லடம் பாரதி அறக்கட்டளை சார்பில், 50 குடும்பத்தினருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் சுரேஷ் கண்ணன் மற்றும் சாகுல் ஹமீது கூறுகையில், 'ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஆண்டுதோறும் உதவி வருகிறோம். இதற்காகவே, பாரதி அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி, பலரும் இணைந்து உதவி செய்கின்றனர். 12வது ஆண்டாக, 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கினோம்,' என்றனர்.