உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவருக்கு விழிப்புணர்வு

மாணவருக்கு விழிப்புணர்வு

அவிநாசி; அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல் லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், 'தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு தொழில்களில்ஒருங்கிணைந்த அணுகுமுறை' என்ற தலைப்பில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். சர்வதேச வணிக துறைத்தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் சிறு, குறு தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் சந்தை வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.கோயம்புத்துார் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் விவேகானந்தன், சிறப்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ