வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், குமரன் ரோட்டிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். உமாநாத், கார்த்தி, ரதாகிருஷ்ணன் உள்பட வங்கியாளர்கள் பங்கேற்றனர். வங்கிகளில் தேவையான எண்ணிக்கையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.ஐந்து நாட்கள் வேலையை நடைமுறைப்படுத்த வேண்டும். வங்கி ஊழியர்களையும், அதிகாரிகளையும் தாக்கும் வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.வரும் மார்ச் 24, 25ம் தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய வங்கிகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்கவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.