பல்லடம்;பல்லடம் அருகே, பனியன் தொழிலாளி ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பல்லடம் அருகேயுறள்ள அவரப்பாளையம் ,வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் மோகன்குமார் 25; பனியன் தொழிலாளி. இவரது தம்பி அருண்குமார் மற்றும் தந்தை மோகன் ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த மோகன்குமாரை, மர்ம நபர்கள் சிலரால் சராமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமையிலான போலீசார் குமாரின் சடலத்தை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர்,போலீசார் கூறியதாவது:சில நாட்களுக்கு முன், மோகன்குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த மூன்று பேருக்கும் இடையே 'டாஸ்மாக்' மதுக்கடையில் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில், மோகன்குமார், மூவரையும் தாக்கினர்.இதனால், ஏற்பட்ட முன் விரோதத்தால், மூவரும் சேர்ந்து, மோகன்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி வீட்டில் தனியாக இருந்த அவரை, மூவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். தடயங்களை சேகரித்து, தலைமறைவான கொலையாளிகளை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பல்லடம், மே 14--பல்லடம் அருகே, பனியன் தொழிலாளி ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பல்லடம் அருகேயுறள்ள அவரப்பாளையம் ,வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் மோகன்குமார் 25; பனியன் தொழிலாளி. இவரது தம்பி அருண்குமார் மற்றும் தந்தை மோகன் ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த மோகன்குமாரை, மர்ம நபர்கள் சிலரால் சராமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமையிலான போலீசார் குமாரின் சடலத்தை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர்,போலீசார் கூறியதாவது:சில நாட்களுக்கு முன், மோகன்குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த மூன்று பேருக்கும் இடையே 'டாஸ்மாக்' மதுக்கடையில் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில், மோகன்குமார், மூவரையும் தாக்கினர்.இதனால், ஏற்பட்ட முன் விரோதத்தால், மூவரும் சேர்ந்து, மோகன்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி வீட்டில் தனியாக இருந்த அவரை, மூவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். தடயங்களை சேகரித்து, தலைமறைவான கொலையாளிகளை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.