உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூத்த குடிமக்கள் காப்பகம் கருவலுாரில் பூமி பூஜை

மூத்த குடிமக்கள் காப்பகம் கருவலுாரில் பூமி பூஜை

அவிநாசி:அவிநாசி அருகே கருவலுாரில் திருப்பூர் லயன்ஸ் ஹேப்பி ஹோம் அறக்கட்டளை சார்பில், மூத்த குடிமக்கள் காப்பகம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது.மூத்த குடிமக்கள் காப்பக அறக்கட்டளை தலைவர் முன்னாள் டி.எஸ்.பி., மயில்சாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் மெஜஸ்டிக் கந்தசாமி, பிரைம் டெக்ஸ் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். பேரூராதீனம் மருதாசல அடிகளார், செஞ்சேரிமலை ஆதீனம் முத்துகுமாரசாமி அடிகளார் ஆகியோர் பங்கேற்று பூமி பூஜையை நடத்தி வைத்தனர்.அறக்கட்டளை செயலாளர் ஜெயசேகரன், பொருளாளர் சுப்பிரமணியம், இணை செயலாளர்கள் ரகுபதி சம்பத், ஐயப்பா பாலாஜி, லயன்ஸ் கிளப் கூட்டு மாவட்டத்தின் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் மதனகோபால், முதல் துணை கவர்னர் ராஜசேகர், இரண்டாம் துணை கவர்னர் செல்வராஜ், முன்னாள் கவுன்சில் சேர்மன் சஜிடேவிட் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி