பா.ஜ., மண்டல அலுவலகம் திறப்பு
திருப்பூர்; திருப்பூரில், இரு இடங்களில் பா.ஜ., மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது.வடக்கு மாவட்ட பா.ஜ., கருவம்பாளையம் மற்றும் எம்.எஸ்., நகர் மண்டலத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில், மாநில பொது செயலாளர் முருகானந்தம் பங்கேற்று அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார். மண்டல தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.