மேலும் செய்திகள்
பா.ஜ., மும்மொழி கையெழுத்து இயக்கம்
07-Mar-2025
மும்மொழி கொள்கையை ஆதரித்து, அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பும், மங்கலம் ரோட்டிலும், பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நகர தலைவர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார். சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் கணியாம்பூண்டி செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பயணிகளிடமும், வீடு வீடாக சென்று பொதுமக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது. சக்தி கேந்திர பொறுப்பாளர் நந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார். லோக்சபா இணை பொறுப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணை தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ்,பொதுச் செயலாளர் பிரபு வெங்கட், ஊடகப்பிரிவு துணை தலைவர் சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
07-Mar-2025