உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடலினை உறுதி செய்... உயரப் பற... சிகரம் தொடு!

உடலினை உறுதி செய்... உயரப் பற... சிகரம் தொடு!

அவிநாசி, குறுமைய தடகள போட்டி, எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி நிர்வாகக் குழு தலைவர் கோவிந்தசாமி, பள்ளியின் தாளாளர் ராதாமணி முன்னிலை வகித்தனர். பள்ளியின் செயலாளர் அனுராகவி வரவேற்றார். கலெக்டர் கிறிஸ்துராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்தார். 100மீ., 200மீ., 400மீ., மற்றும், 1,600மீ., தொடர் ஓட்டம், நீளம், உயரம், மும்முனை தாண்டுதல், குண்டு, ஈட்டி, வட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில், 600க்கும் அதிகமான வீரர், வீராங்கனையர் பங்கேற்று திறமை காட்டினர்.போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் பரிசு வழங்கினார். பள்ளியின் முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி