உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லை; வேதனையில் பயணியர்

பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லை; வேதனையில் பயணியர்

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு நகரங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.பயணியர் பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பிரதான வழித்தடங்களை ஆக்கிரமித்து, வணிக வளாகத்திலுள்ள கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் வரும் வழியிலேயே பொதுமக்கள் வர வேண்டிய அவல நிலை உள்ளது.மேலும், உணவகங்கள், ஓட்டல்களிலிருந்து, இலை மற்றும் உணவு கழிவுகள் நேரடியாக பயணியர் காத்திருக்கும் பகுதியில் போடப்படுகிறது. ஓட்டல் மற்றும் டீக்கடைகளிலிருந்து, உணவு கழிவுகள் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் வெளியேற்றப்படுகிறது.திறந்த வெளி சாக்கடை கால்வாயாக, பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டுள்ளதால், துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. சாக்கடை கழிவு நீரில் பயணியர் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.அதே போல், கோவை, பழநி, வால்பாறை, தேவனுார்புதுார் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில், பயணியர் அமர இருக்கை வசதியில்லை. இதனால், அவர்கள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.மேலும், அவர்கள் வசதிக்காக, அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள், சுத்திகரிப்பு கருவி ஆகியவையும் பயனில்லாமல் வீணாக உள்ளது.அதே போல், கழிப்பிட வசதிகள் இல்லாததோடு, இருக்கும் ஒரு கழிப்பிடமும் பராமரிப்பின்றி, துர்நாற்றத்துடன் காணப்படுவதால், திறந்த வெளி கழிப்பிடங்கள் பல இடங்களில் உருவாகியுள்ளது.எனவே, உடுமலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை