உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சதுரங்க பயிற்சி துவக்க விழா

சதுரங்க பயிற்சி துவக்க விழா

திருப்பூர்;குழந்தைகளுக்கானசதுரங்க பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.கொங்கு கரங்கள் அறக்கட்டளை மற்றும் மணி செஸ் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு துவக்க விழா, திருப்பூர், மங்கலம் ரோட்டிலுள்ள கொங்கு கரங்கள் திருமண தகவல் மைய அலுவலகத்தில் துவங்கியது.இதில், திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாச்சிமுத்து, அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கதிரேசன், கொங்கு வர்த்தக கூட்டமைப்பு தலைவர் வசந்தகுமார், இணை செயலாளர் சிவகுமார் ஆகியோர் பேசினர். மணி செஸ் பவுண்டேஷன் தலைவர் கவுதமன், கொங்கு கரங்கள் அறக்கட்டளை தலைவர் கவியரசு, செயற்குழு உறுப்பினர்கள் ரவி, சுப்ரமணியம், ஜீவா உள்ளிட்டோ பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி