உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் கோப்பை போட்டி:பங்கேற்க பலர் ஆர்வம்

முதல்வர் கோப்பை போட்டி:பங்கேற்க பலர் ஆர்வம்

திருப்பூர்;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்பட உள்ளது.பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடக்கவுள்ளது.இப்போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு ஆக., 17ல் துவங்கியது; ஆக., 25ம் தேதியுடன் பதிவு அவகாசம் முடிந்த நிலையில், https://sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், செப்., 2 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் நான்கு பிரிவு போட்டிகளில் பங்கேற்க, ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.முதல்வர் கோப்பை போட்டியில், மாநில அளவில், தனிநபர் பிரிவில், முதலிடம் பெறுவோருக்கு ஒரு லட்சம், 2வது மற்றும் மூன்றாவது இடம் பெறுவோருக்கு முறையே, 75 ஆயிரம் மற்றும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.குழுப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா, 75 ஆயிரம், இரண்டாம் பரிசாக, 50 ஆயிரம், மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இன்றுடன் (செப்., 2) பதிவுக்கான அவகாசம் முடிவடைகிறது.இன்று மாலைக்குள் பதிவு செய்பவர்கள் போட்டியில் பங்கேற்க முடியும். கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, அல்லது, 74017 03515 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !