மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கலைப்போட்டி
17-Feb-2025
உடுமலை; உடுமலை விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் நுண்கலை மன்ற நிறைவு விழா நடந்தது.கல்லுாரி வளாகத்தில் இவ்விழா நடந்தது. விலங்கியல் துறை பேராசிரியர் மணிமேகலை வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி முன்னிலை வகித்தார்.விழாவையொட்டி நுண்கலை மன்றத்தின் சார்பில் மாணவியருக்கு குழு நடனம், தனியார் நடனம், ரங்கோலி, ஓவியம், மெகந்தி, தலை அலங்காரம், முகத்தில் ஓவியம் உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரி ஆலோசகர் பரிசுகளை வழங்கினார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் வைஷ்ணவி நன்றி தெரிவித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரஜினி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
17-Feb-2025