உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை - சேலம் பாசஞ்சர் இயக்கம் நிறுத்தம்; 3 ஆண்டாக 4 மாவட்ட பயணிகளுக்கு வருத்தம் 

கோவை - சேலம் பாசஞ்சர் இயக்கம் நிறுத்தம்; 3 ஆண்டாக 4 மாவட்ட பயணிகளுக்கு வருத்தம் 

திருப்பூர்; கடந்த, 2022, மார்ச் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் மீண்டும் ரயில் இயக்கம் துவங்காததால், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய நான்கு மாவட்ட பயணிகள் சிரமம் தொடர்கிறது.சேலத்தில் இருந்து கோவைக்கு பாசஞ்சர் ரயில் (எண்: 06802) இயக்கப்பட்டு வந்தது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக இயங்கி வந்த இந்த ரயில், நான்கு மாவட்டத்தின் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் நின்று செல்லும் ஒரே ரயிலாக இருந்தது. கொரோனா காலகட்டத்தில் இயக்கம் நிறுத்தப்பட்ட இந்த ரயில், 2022 பிப்., மாதம் மீண்டும் இயக்கப்பட்டது.வந்த ஒரு வாரத்தில் பராமரிப்பு பணியை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்த பின், தற்போது வரை மீண்டும் ரயில் இயக்கம் துவங்கவில்லை.இது குறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது:சேலத்தில் துவங்கி கோவை செல்லும் வழியில் பல பகுதிகளில் இந்த ரயில் நின்று செல்வதால், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை என நான்கு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் பயனடைந்தனர். பராமரிப்பு பணி எனக்கூறி நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில், ரயில் தண்டவாள மேம்பாட்டு பணி எனக்கூறி ஓராண்டு நிறுத்தப்பட்டது. 2022 பிப்ரவரியில் நிறுத்தப்பட்டு, தற்போது, மூன்று ஆண்டு முழுமையாக நிறைவு பெற்று விட்டது.ஆனால், நிறுத்தப்பட்ட சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் இயக்கத்தை இன்னமும் துவங்கவில்லை.நான்கு மாவட்ட பயணிகள் தினசரி பஸ்களில் சிரமத்துடன் சென்று திரும்புகின்றனர். ரயில் இயக்கினால், தினசரி, 5 ஆயிரம் பேர் வரை பயன்பெறுவர். தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் ஆலோசித்து மார்ச் இறுதிக்குள் முடிவெடுத்து, 2025 ஏப்ரல் முதல் பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GaneshPriyaGaneshPriya Ganesan.T
மார் 06, 2025 10:27

சேலம் கோவை பாசஞ்சர் ரயில் உடனடியாக சேலம் ரயில்வே கோட்டம் ஆலோசித்து ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் இதனால் நான்கு மாவட்ட மக்கள் வேலைக்கு செல்ல மிகவும் சிற்பத்திற்க்கு ஆளாகி வருகின்றோம் சேலம் கோவை பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும்


V SURESH
மார் 06, 2025 09:13

இந்த ரயிலை சேலம் - கோவை வழியாக பழனி வரை இயக்கினால் மிகவும் நல்லது.


Gajageswari
மார் 04, 2025 18:24

உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரயில் இயக்கபடுவது பற்றி வழியில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்


KN Gopalan
மார் 04, 2025 15:14

That is atrocious on the part of SR divisional HQ in Salem to have stopped that service which was useful for daily office goers,labourers,students. In addition SR has not restarted any of the several metre gauge days trains which were stopped due to gauge conversion. It is high time that they should restart the overnight Rameshwaram express and CBE Madurai intercity express without any further delays


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை