உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு நிலங்களை கலெக்டர் ஆய்வு

இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு நிலங்களை கலெக்டர் ஆய்வு

உடுமலை:உடுமலை தாலுகா பகுதிகளில், இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நிலங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.உடுமலை தாலுகாவில், குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு ஊராட்சி, அம்மாபட்டி, கொண்டலாம்பட்டி மற்றும் குடிமங்கலம் நால்ரோடு பகுதிகளில், பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலங்களை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.மேலும், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி, பெதப்பம்பட்டியில், கலைஞரின் 'கனவு இல்ல திட்டத்தின்' கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததோடு, திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை, மாவட்ட கலெக்டர் நடத்தி, மக்களின் மனுவுக்கு விரைந்து தீர்வு காண உத்தரவிட்டார்.ஆய்வின் போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், குடிமங்கலம் பி.டி.ஓ., க்கள் செந்தில் கணேஷ் மாலா, நாகலிங்கம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை