அடாவடி நிதி நிறுவனம் எஸ்.பி.,யிடம் புகார் மனு
திருப்பூர்; கடன் தொகையை ெசலுத்திய பின்பும் ஆவணங்களை தராமல் மிரட்டுவதாக நிதி நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அருகே பொங்குபாளையத்தைச் சேர்ந்த, பனியன் டெய்லர் நாகராஜன்,49, திருப்பூர் எஸ்.பி.,யிடம் அளித்த புகார் விவரம்:அவிநாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், எனது பைக் மற்றும்வீட்டுபத்திரத்தை அடமானம் வைத்து 83 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றேன். உரிய தவணைகள் அனைத்தும் செலுத்தி விட்டேன்.இருப்பினும் இன்னும் 41 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என்னை வீடு தேடி வந்து மிரட்டினர்.அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது ஆவணங்களைப் பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.