உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் சொற்பொழிவு நிறைவு விழா 

தொடர் சொற்பொழிவு நிறைவு விழா 

உடுமலை;உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு நிறைவு விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், 800வது ஆன்மிக நிகழ்ச்சியாக, பிரசன்ன விநாயகர் கோவிலில், கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு ஜூன் 29ல், துவங்கியது.'நடையின் நின்றுயர் நாயகன்', 'பங்கமில் குணத்து பரதன்', 'மான் செய்த மாயம்', 'வரம்பில் ஆற்றல் வாலி', 'சுகம் தரும் சுந்தரகாண்டம்', 'வசிட்டனே புனைந்தான் மவுலி', உள்ளிட்ட தலைப்புகளில், ஆன்மிக சொற்பொழிவாளர் சுபாசு சந்திரபோசு பேசினார்.நிறைவு விழாவில் திரளான பக்தர்களும், கார்த்திகை விழா மன்ற நிர்வாகிகளும் பங்கேற்று, சொற்பொழிவாளருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை