மேலும் செய்திகள்
தொடர் விடுமுறை 65 சிறப்பு பஸ்கள்
24-Aug-2024
திருப்பூர்:இந்த வாரம் சனி, ஞாயிறுடன் கிருஷ்ண ஜெயந்தியான திங்கள்கிழமையும் விடுமுறை தினமாகும். மூன்று நாட்கள் விடுமுறையை முன்னிட்டு, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15, கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து 35, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 என மொத்தம், 65 சிறப்பு பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு பண்டிகைக்கு பின் வார விடுமுறை நாட்களில் பஸ்களில் கூட்டம் குறைந்தது; சிறப்பு பஸ்களும் குறைக்கப்பட்டன. மூன்று நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சிறப்பு பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் துவங்கி, நாளை மறுதினம் (26 ம் தேதி) இரவு வரை சிறப்பு பஸ்கள் இயங்கும். இந்த பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.''மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு சேலம் மற்றும் திருவண்ணாமலை வழியாக தினசரி இரண்டு சிறப்பு பஸ்கள் இரவில் இயக்கப்படும்'' என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
24-Aug-2024